டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்து சிதறியது இந்தியாவில் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், பாகிஸ்தானிலும் தலைநகர் இஸ்லாமாபாத்தில், நீதிமன்ற வளாகம் அருகே நேற்று மதியம் திடீரென குண்டு வெடித்தது பரபரப்ப்பை ஏற்படுத்தியது.
பொதுமக்கள் அதிகம் செல்வரும் பரபரப்பான பகுதியில் நடந்த இந்த தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட நீதிமன்ற நுழைவுவாயிலுக்கு அருகில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் வெடிப்பு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பகுதியிலிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்து ஓடிச் செல்ல, பாதுகாப்புப் படையினர் மற்றும் மீட்புப் பணியாளர்கள் உடனே சம்பவ இடத்துக்கு விரைந்தனர். காயமடைந்தவர்களை உடனடியாக ஆம்புலன்ஸ்களில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த தாக்குதல் தற்கொலை குண்டுவெடிப்பாக இருக்கக்கூடும் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பவத்துக்குப் பின்னர் நீதிமன்றம் மற்றும் சுற்றுப்புறம் முற்றுகையிடப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர்.

சம்பவத்துக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்த பகுதியில் நடந்த இந்த தாக்குதல் பாகிஸ்தானின் பாதுகாப்பு சூழ்நிலை மீதான கவலைக்குரிய நிலையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
தொடர்ந்து, பாதுகாப்பு துறையினர் நகரம் முழுவதும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்றும், தாக்குதல் குறித்த தகவல் கிடைத்தால் பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும் என போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!