ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஷமீனா ரியாஸ் கோப்பையை வென்றார்!
Dinamaalai November 12, 2025 01:48 PM

அசாம் மாநிலம் குவாஹாட்டியில் நடைபெற்ற ஈஸ்டர்ன் ஸ்லாம் சர்வதேச ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னை மாணவி ஷமீனா ரியாஸ் சிறப்பான ஆட்டத்துடன் சாம்பியன் பட்டம் கைப்பற்றினார்.

வடபழநியைச் சேர்ந்த எஸ்.ஆர்.எம்.ஐ.எஸ்.டி. கல்லூரியில் பி.டெக் முதலாம் ஆண்டு படிக்கும் ஷமீனா, மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த அஞ்சலி சேம்வாலை எதிர்கொண்டார். கடுமையான போட்டியாக அமைந்த இப்போட்டியில் ஷமீனா 11-9, 13-11, 9-11, 11-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றார்.

இந்த வெற்றி மூலம் சர்வதேச ஸ்குவாஷ் அரங்கில் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்திருப்பதாக விளையாட்டு வட்டாரங்கள் பாராட்டியுள்ளன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.