இந்திய பங்குச்சந்தை திடீர் ஏற்றம்.. சென்செக்ஸ் 500 புள்ளிகள் உயர்ந்ததால் மகிழ்ச்சி..!
WEBDUNIA TAMIL November 12, 2025 03:48 PM

இந்திய பங்குச்சந்தை நேற்று காலை சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கினாலும், மதியத்திற்கு பின் உயர்ந்தது என்பதும், இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கியது முதலே பங்குச்சந்தை ஏற்றத்தில் உள்ளதால் முதலீட்டாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 530 புள்ளிகள் உயர்ந்து 84,043 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசியப் பங்குச்சந்தை நிஃப்டி 153 புள்ளிகள் உயர்ந்து 24,848 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

இன்றைய பங்குச்சந்தையில் ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், பாரதி ஏர்டெல், சிப்லா, ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ், ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, ஐடிசி, ஜியோ ஃபைனான்ஸ், கோடக் மஹேந்திரா வங்கி, ஸ்டேட் வங்கி, சன் பார்மா, டாடா ஸ்டீல், டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகளின் விலைகள் உயர்ந்துள்ளன.

அப்போலோ ஹாஸ்பிடல், பஜாஜ் ஆட்டோ, ஆசியன் பெயிண்ட்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், இண்டிகோ, மாருதி, நெஸ்லே இந்தியா, சன் பார்மா, ஸ்ரீராம் ஃபைனான்ஸ் உள்ளிட்ட பங்குகளின் விலை இன்று குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.