தங்கம் விலை நேற்று முன்தினம் விலை அதிகரித்து காணப்பட்டது. அன்றைய தினம் ஒரு சவரன் ரூ.1,440-க்கு உயர்ந்திருந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் விலை அதிகரித்தது. அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11,480-க்கும், ஒரு சவரன் ரூ.91,840-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.220-ம், சவரனுக்கு ரூ.1,760-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,700-க் கும், ஒரு சவரன் ரூ.93,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.400-ம், சவரனுக்கு ரூ.3,200-ம் உயர்ந்திருந்தது
தங்கம் விலை நேற்று (நவ. 11) உயர்ந்த நிலையில் இன்று விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22K தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.11,600க்கும், சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.92,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து, 173க்கும், கிலோவுக்கு ரூ.3,000-மும் அதிகரித்துள்ளது. இதனால், ஒரு கிலோ வெள்ளி ரூ. 1,73,000க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் உயரத் தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.4-ம், கிலோவுக்கு ரூ.4 ஆயிரமும் அதிகரித்தது. நேற்று கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ரூ.1,000-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.170-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது. இந்நிலையில் வெள்ளி விலை இன்றும் அதிகரித்துள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் ரூ.173 க்கும், ஒரு கிலோ ரூ. 1 லட்சத்து 73 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-
12.11.2025 ஒரு சவரன் ரூ.92,800 (இன்று)
11.11.2025 ஒரு சவரன் ரூ.93,600 (நேற்று)
10.11.2025 ஒரு சவரன் ரூ.91,840
09.11.2025 ஒரு சவரன் ரூ.90,400
08.11.2025 ஒரு சவரன் ரூ.90,400
07.11.2025 ஒரு சவரன் ரூ.90,160
06.11.2025 ஒரு சவரன் ரூ.90,560