எகிப்து தலைநகர் கெய்ரோவில் சுற்றுலா பயணிகள் பயணித்த பஸ், ஹர்ஹடா–கெய்ரோ தேசிய நெடுஞ்சாலையில் ரஸ் ஹரிப் பகுதியில் எதிரே வந்த லாரியுடன் மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். பஸ்சில் 27 ரஷியர்கள் உள்பட 40க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.

விபத்தில் எகிப்தைச் சேர்ந்த பஸ் டிரைவரும், ரஷிய சுற்றுலா பயணியும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 39 பேர் பலத்த காயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார், மீட்புப்பணியில் ஈடுபட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து எகிப்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!