திண்டுக்கல் மாவட்டம் தோட்டனூத்து அருகே பாத்திமா நகரைச் சேர்ந்த ஜார்ஜ் பெர்னாண்டோ (42) என்பவர் அமிர்தா பால் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று அவர் மினிவேனில் பாலை ஏற்றிக்கொண்டு மேலூர் அருகே உள்ள சேக்கிபட்டியில் இறக்கிவிட்டு திரும்பிச் சென்றபோது, நத்தம் அப்பாஸ்புரம் பகுதியில் சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த தடுப்பில் வேன் மோதி விபத்துக்குள்ளானது. அதில், ஜார்ஜ் பெர்னாண்டோ ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தபடியே உயிரிழந்தார்.

தகவல் அறிந்த நத்தம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த உடலை நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டனர். பின்னர் அவரது உடல் உடற்கூறாய்விற்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இந்த விபத்து அப்பாஸ்புரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்லில் இருந்து கொட்டாம்பட்டி நோக்கிச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கோபால்பட்டி, எரமநாயக்கன்பட்டி, காட்டு வேலம்பட்டி, மெய்யம்பட்டி, அப்பாஸ்புரம் போன்ற பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சாலை தடுப்புகள் காரணமாக இதுவரை 100-க்கும் மேற்பட்ட விபத்துகளும் 25-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்று ஆபத்தான தடுப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை என மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!