சபரிமலை ஐயப்பசுவாமி கோயிலில் தங்க அலங்காரம் தொடர்பாக வெளிப்பட்ட பெரும் மோசடி விவகாரத்தில் திருவிதாங்கூர் தேவசம்போர்டின் முன்னாள் கமிஷனர் மற்றும் தலைவராக இருந்த என்.வாசு கைது செய்யப்பட்டுள்ளார்.
சபரிமலை கருவறை முன் துவாரபாலகர் சிலைகளிலும் திருநடையிலும் தங்க கவசம் பதிக்கும் பணியில் முறைகேடு நடந்துள்ளதாக சிறப்பு புலனாய்வு குழு கண்டறிந்தது. இதுகுறித்து இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இரு வழக்குகளிலும் உபயதாரராக இருந்த உன்னிகிருஷ்ணன் போற்றியின் பெயர் முதலில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பட்டியலில் இடம்பெற்றது. பின்னர் முன்னாள் நிர்வாக அதிகாரி முராரி பாபு, முன்னாள் செயல் அதிகாரி சுதீஷ், திருவாபரணம் கமிஷனர் கே.எஸ்.பைஜூ ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இப்போது வாசுவும் கைது செய்யப்பட்டதால் கைதானோர் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.
2019 ஆம் ஆண்டு இவர் பதவியில் இருந்த காலத்தில் தங்கம் பதிக்கும் பணியை உன்னிகிருஷ்ணன் போற்றியிடம் ஒப்படைத்திருந்தார். ஆனால், பணியின்பின் மீதமிருந்த தங்கம் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதையும், தங்க வாசல் கட்டளைகளை செம்பு என பதிவுசெய்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
வாசு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், வரும் 24 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கைச் சுற்றி மேலும் பல முக்கியர்கள் மீது விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!