“அவதூறு மன்னர்கள் விரைவில் மக்களால் தூக்கி எறியப்படுவார்கள்” ... திமுக மீது விஜய் கடும் பாய்ச்சல்!
Dinamaalai November 12, 2025 06:48 PM

 

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூடேற்றம் அதிகரித்துள்ளது. திமுகவுக்கு எதிராக தவெக பொதுக்குழு கூட்டத்தில் விஜய் மற்றும் ஆதவ் அர்ஜூனா கடுமையாக விமர்சித்ததைத் தொடர்ந்து, திமுகவினர் சமூக வலைதளங்களிலும் போராட்டங்களிலும் எதிர்விமர்சனத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில் திமுக மீது கடும் வார்த்தை பிரயோகத்தை நடத்தியுள்ளார்.

அதில், “அதிகார மமதை கொண்ட கட்சி ஒன்று, விரைவில் மக்களால் தூக்கி எறியப்படப் போகிறது. அவதூறு மற்றும் ஊழல்தான் அந்தக் கட்சியின் அரசியல் அடிப்படை. நாங்கள் மக்களுடன் இதயப்பூர்வமாக கலக்கும் இயக்கமாக இருப்பதால் அவர்களின் பொறாமை அதிகரித்துள்ளது. நாங்கள் வைத்திருக்கும் மிக லேசான விமர்சனங்களுக்கே மக்கள் மிகப் பெரிய வரவேற்பு அளிக்கின்றனர். அதனால்தான் அவர்கள் அஞ்சி நடுங்குகின்றனர்” என கூறியுள்ளார்.

மேலும், “தமிழ், தமிழர் என்ற பெயரில் பாசாங்கு காட்டும் அவர்களின் உண்மை முகத்தை மக்கள் தெரிந்து விட்டனர். அறிவுத் திருவிழா என வைத்த நிகழ்வும், உண்மையில் அவதூறு திருவிழாவாக மாறிவிட்டது. நாங்கள் மக்களுடன் இணைந்து 2026 சட்டமன்றத் தேர்தலில் இந்த அவதூறு மன்னர்களுக்கு மக்கள் சக்தியின் மதிப்பை உணர்த்துவோம்” எனவும் விஜய் தெரிவித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.