தமிழகத்தில் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் எழுந்து வரும் நிலையில், மீண்டும் அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. மத தலங்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்களின் வீடுகள் என பல இடங்களுக்கு தொடர்ச்சியாக மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்த முறை டி.ஜி.பி அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் புதிய மிரட்டல் வந்துள்ளது.
அந்த மின்னஞ்சலில் பாடகி சின்மயியின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் திருச்சி சத்திரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியிலும் வெடிகுண்டு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர்.
விசாரணையில், எந்தவித வெடிபொருளும் கண்டுபிடிக்கப்படாததால், இந்த மிரட்டல் புரளி என உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்த நபரை அடையாளம் காண போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!