இந்தி திரையுலகினருக்கு இது மோசமான காலம் போல. நடிகர் தர்மேந்திரா கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் நிலையில் பாலிவுட் பிரபல நடிகரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தா (61), நேற்றிரவு திடீரென மயங்கி விழுந்ததால் ஜூஹுவில் உள்ள கிரிட்டிகேர் மருத்துவமனையில் அவசரமாக சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அவரது நண்பரும் சட்ட ஆலோசகருமான லலித் பிந்தால் இது குறித்து தெரிவிக்கையில், “கோவிந்தா ஜி திடீரென மயக்கம் ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்,” என்றார். மேலும் விவரங்களை கூற அவர் மறுத்தார்.
மருத்துவர்கள் தற்போது கோவிந்தாவின் உடல் நிலையை நெருக்கமாக கவனித்து வருகின்றனர். தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இது கோவிந்தாவுக்கு சமீபத்திய மருத்துவ அவசர நிலை அல்ல. கடந்த 2024 அக்டோபரில், தனது உரிமம் பெற்ற துப்பாக்கியை வீட்டில் கையாளும் போது தவறுதலாக காலை பகுதியில் சுட்டுக்கொண்டதால் அதே மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அவர் முழுமையாக குணமடைந்திருந்தார். மேலும், 2021ஆம் ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த கோவிந்தா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தார்.

ஹீரோ நம்பர் 1, கூலி நம்பர் 1, ராஜா பாபு, பார்ட்னர் போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்த கோவிந்தா, 1990களில் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரமாக விளங்கினார். கடைசியாக அவர் நடித்த படம் ரங்கேலா ராஜா(2019) ஆகும். தற்போது தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் புதிய திரைப்படத் திட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் என கூறப்படுகிறது. கோவிந்தாவின் குடும்பத்தினர், அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் நிலையில் தனியுரிமையை மதிக்குமாறு ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!