டெல்லியில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 20-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வெடிப்பு தற்கொலைத் தாக்குதலாக இருக்கக்கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். சம்பவம் நடந்த இடம் சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது. அதில், கார் ஓட்டிச் சென்றவர் ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்த டாக்டர் உமர் முகமது (35) என்பதும், அவர் பரிதாபாத்தில் உள்ள அல்பலா மருத்துவ பல்கலைக்கழகத்தில் டாக்டராக பணிபுரிந்ததும் தெரியவந்துள்ளது.

வெடிப்பில் டாக்டர் உமரின் உடல் அடையாளம் காண முடியாத நிலையில் இருந்தது. இதையடுத்து அவரது தாயார் சமீமா பேகம், தந்தை குலாம் நபி பாத் மற்றும் இரண்டு சகோதரர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். உமரின் உடலை உறுதிப்படுத்த டி.என்.ஏ. பரிசோதனைக்கு சமீமா பேகத்திடம் மாதிரி எடுக்க போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். அதேபோல் குலாம் நபிக்கும் பரிசோதனை நடைபெறுகிறது. மேலும், உமருடன் பணியாற்றிய மூன்று டாக்டர்களும் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில், காஷ்மீரின் குல்காமை சேர்ந்த டாக்டர் தாஜாமுல் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். ஸ்ரீநகர் எஸ்.எம்.எச்.எஸ் மருத்துவமனையில் பணிபுரிந்த இவருக்கும் டாக்டர் உமருக்கும் தொடர்பு இருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. இதோடு, வெடித்த ஹூண்டாய் i20 காரை விற்பனை செய்த அரியானா மாநில டீலரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தின் பின்னணியில் பெரும் பயங்கரவாத சதி மறைந்து இருக்கலாம் என புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!