எலும்புகள் (Bone Strength) உடலுக்கு தேவையான ஆதரவு மற்றும் உடல் அமைப்பையும் தருகிறது. மேலும், இது நமது அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு சிறிய மற்றும் பெரிய பணிகளையும் செய்வதற்கும் தேவையான வலுவையும் தருகிறது. எலும்புகள் சரியான இடத்தில் இல்லையென்றால், உங்கள் சிறு கல்லை கூட இடம் பெயர செய்ய முடியானது. வலுவான எலும்புகளை பெற உடலில் கால்சியம் (Calcium) சமநிலையை பராமரிப்பது முக்கியம். இது தசைகளுக்கு தேவையான ஆற்றலை வழங்குவதுடன் பற்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது. சிறு வயதில் எலும்பு அடர்த்தியானது வளர வளர் அதிகரிக்கும். அதேநேரத்தில் வயது முதிர்ச்சி அடையும்போது இதுவும் குறையவும் தொடங்கும். எனவே, ஒவ்வொருவருக்கும் வலுவான எலும்புகள் இருப்பது மிகவும் முக்கியமானது. வலுவான எலும்புகள் இருப்பது உடலின் நிலையை மேம்படுத்துகிறது, சோர்வைக் குறைத்து, மூட்டு வலி மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எதிர்கால பிரச்சினைகளைத் தடுக்க உதவுகிறது.
எலும்பு பிரச்சனைகளுக்கு தீர்வு இல்லையா..?பலவீனமான எலும்புகள் வெறும் ஒரு சாதாரண உடல்நலப் பிரச்சினை மட்டுமல்ல. இவை நாளடைவில் பலவிதமான உடல்நலப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். முதலாவதாக, பலவீனமான எலும்புகள், லேசாக நகர்ந்தால் கூட எலும்பு முறிவு அபாயத்தை அதிகரிக்கின்றன. நீங்கள் திடீரென திரும்பினால் கூட எலும்பு முறிவை ஏற்படுத்தும். இதனால், நீங்கள் நீண்ட காலம் ஓய்வு எடுக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தும்.
ALSO READ: வெறும் 10 நிமிடங்கள் நடந்தால் போதும்.. உங்கள் மூட்டுகள் வலுவடையும்!
இதுமட்டுமின்றி மூட்டு வலி, முதுகு மற்றும் இடுப்பு விறைப்பு, இயக்கம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் எடையை தூக்க முடியாமை போன்றவைக்கும் வழிவகுக்கும். ஆஸ்டியோபோரோசிஸ், கால்சியம் குறைபாடு மற்றும் வைட்டமின் டி குறைபாடு போன்றவை இதற்கு காரணமாக இருக்கலாம். பலவீனமான எலும்புகள் வயதானவர்களின் சமநிலையை பாதிக்கின்றன. எதற்கெடுத்தாலும் விழும் அபாயத்தை அதிகரிக்கின்றன.
பலவீனமான எலும்புகளுக்கான காரணங்கள் என்ன?எலும்பு பலவீனம் பல காரணங்களால் ஏற்படலாம். உணவில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி இல்லாததே இதற்கு மிகவும் பொதுவான காரணம். ஏனெனில் இரண்டும் வலுவான எலும்புகளுக்கு அவசியம். சூரிய ஒளி இல்லாததும் வைட்டமின் டி குறைபாட்டிற்கு பங்களிக்கிறது. வயதுக்கு ஏற்ப எலும்புகள் மெலிந்து போகத் தொடங்குகின்றன. குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் முற்றிலும் நின்ற பிறகு, எலும்பு பலவீன பிரச்சனையை அதிகமாக எதிர்கொள்கிறார்கள்.
இளமை பருவ காலத்தில் உடல் செயல்பாடு இல்லாமை, தொடர்ந்து உட்கார்ந்து வேலை பார்த்தல், புகைபிடித்தல், அதிகப்படியான மது அருந்துதல் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக உட்கொள்வது எலும்புகளை பலவீனப்படுத்துகிறது. தைராய்டு, சிறுநீரக நோய் மற்றும் ஸ்டீராய்டுகள் போன்ற மருந்துகளின் நீண்டகால பயன்பாடும் எலும்பு அடர்த்தியைக் குறைக்கும். எனவே, உங்களது சீரான வாழ்க்கை முறையில் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது முக்கியம்.
ALSO READ: எலும்பு ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் அத்திப்பழங்கள்.. எப்படி எடுத்துக்கொள்வது நல்லது..?
எலும்பு பலவீனத்தை தடுப்பது எப்படி?