தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே கோவிந்தபுரம் பகுதியில் நேற்று மாலை கடும் விபத்து ஏற்பட்டது. மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த அரசுப் பேருந்து, முன்னால் சென்ற டிராக்டரை முந்த முயன்றபோது, டிராக்டரின் சக்கரத்தில் மோதியது.

அதன் தாக்கத்தில் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, எதிரே வந்த ஆடுதுறை நோக்கி வந்த மற்றொரு அரசுப் பேருந்துடன் நேருக்கு நேர் மோதியது. இதில் இரு பேருந்துகளின் முன்பகுதி சேதமடைந்ததுடன், கண்ணாடிகள் நொறுங்கின. விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அருகில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு திருவிடைமருதூர் மற்றும் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தால் கும்பகோணம் – மயிலாடுதுறை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!