கோவையில் பாட்டியை கொலை செய்து விட்டு, கணவரை கொலை செய்ய முயற்சித்த கள்ளக்காதல் ஜோடி கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டம், அன்னூர் அடுத்துள்ள கஞ்சப்பள்ளி பிரிவு பகுதியில் லோகேந்திரன்(33), ஜாய்மெடில்டா (27) தம்பதியினர். கடந்த 7 வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 6 வயது மகன் உள்ளார். இந்நிலையில் ஜாய்மெடில்டா, கர்நாடக பகுதியைச் சேர்ந்த நாகேஷ்(25) என்பவர் பணி நிமித்தமாக அடிக்கடி சந்தித்ததில் கள்ளக்காதல் செய்து வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த லோகேந்திரன் ஜாய்மெடில்டா-வை, நாகேஸ் உடன் பழக வேண்டாம் எனக் கூறி கண்டித்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 23ஆம் தேதி ஜாய்மெடில்டா மற்றும் நாகேஷ் ஆகிய இருவரும் சேர்ந்து லோகேந்திரனை கொலை செய்ய திட்டமிட்டு அன்று அதிகாலை இருவரும் சேர்ந்து கொலை முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது லோகேந்திரன் கதறும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு வந்து லோகேந்திரனை காப்பாற்றினர். இது குறித்து அன்னூர் காவல் நிலையத்தில் லோகேந்திரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதனை அடுத்து ஜாய்மெடில்டா மற்றும் நாகேஷ் ஆகிய இருவரையும் கைது செய்த அன்னூர் போலீசார், அன்னூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இருவரையும் தற்போது போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். அதில் கடந்த வருடம் ஏப்ரல் ஐந்தாம் தேதி கணவர் லோகநாதன் தனது சொந்த வேலை காரணமாக மதுரைக்குச் சென்றுள்ளதும், அப்போது ஜாய்மெடில்டா, நாகேஷ் உடன் இருப்பதை கண்ட லோகேந்திரனின் பாட்டி மயிலாத்தாள் (60) சத்தம் போட்டதால் தகவல் வெளியே தெரிந்துவிடும் எனக்கருதி ஜாய்மெடில்டா மற்றும் நாகேஷ் இருவரும் சேர்ந்து மயிலாத்தாளை ஒப்புக்கொண்டனர். இதனை அடுத்து அன்னூர் போலீசார் ஜாய்மெடில்டா மற்றும் நாகேஷ் இருவரையும் பாட்டி மயிலாத்தாள் கொலை சம்பவம் நடந்த போது என்ன நடைபெற்றது. கணவரை எவ்வாறு கொலை செய்ய முயற்சி செய்தார்கள், எதற்காக கொலை செய்தார்கள், எப்படி தப்பிக்க முயற்சி செய்தார்கள் என்பது குறித்து அருகில் இருந்தவர்களிடம் இருவரையும் நேரில் அழைத்துச் சென்ற அன்னுர் காவல் ஆய்வாளர் செல்வம் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.