சிவகங்கையில் இருந்து சூரக்குடி நோக்கி தினசரி இயக்கப்படும் தனியார் மினி பேருந்தை, இன்று (12.11.2025) வழக்கம்போல் ஓட்டுநர் அலெக்ஸ் இயக்கி வந்தார். பேருந்தில் ஏராளமான பயணிகள் இருந்த நிலையில், ஏனாபுரத்தைச் சேர்ந்த சந்தோஷ் (16) மற்றும் புதுப்பட்டியைச் சேர்ந்த சூர்யா (18) ஆகியோர் படிக்கட்டில் தொங்கி சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பேருந்து ஆதம் பள்ளிவாசல் அருகே சென்றபோது, முன்னால் சென்ற பள்ளி வேன் இடது பக்கம் திரும்பியதால், அதை முந்த முயன்ற மினி பேருந்தின் படிக்கட்டில் வேன் உரசியது. இதில், படிக்கட்டில் தொங்கி சென்ற சந்தோஷ் மற்றும் சூர்யா இருவரும் கடுமையாக காயமடைந்தனர். உடனே பொதுமக்கள் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், சந்தோஷ் உயிரிழந்ததாக தெரிவித்தனர். சூர்யா சிகிச்சையில் உள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சந்தோஷ் சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!