உலகக் கால்பந்தின் தலைசிறந்த வீரராகப் போற்றப்படும் போர்ச்சுகல் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தற்போது சவுதி அரேபியாவின் அல் நாசர் அணிக்காக விளையாடி வருகிறார். 950-க்கும் மேற்பட்ட கோல்களை அடித்து வரலாற்றில் சாதனை படைத்த அவர், போர்ச்சுகல் தேசிய அணிக்காக 223 போட்டிகளில் விளையாடி 141 கோல்களைப் பதிவு செய்துள்ளார்.
View this post on InstagramA post shared by KIDDAAN | Vlueprints | Anurag Sharma (@kiddaan)
இந்நிலையில், 2026 உலகக் கோப்பைக்குப் பின் ஓய்வு பெறுவதாக ரொனால்டோ அறிவித்துள்ளார். “தற்போது நான் மிகச் சிறப்பாக உணர்கிறேன். இன்னும் வேகமாகவும் கூர்மையாகவும் விளையாடுகிறேன். ஒரு அல்லது இரண்டு ஆண்டுகள் மட்டுமே விளையாடுவேன். 2026 உலகக் கோப்பைக்குப் பிறகு ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன்,” என அவர் தெரிவித்துள்ளார்.

ரொனால்டோவின் இந்த அறிவிப்பு உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 48 அணிகள் பங்கேற்கும் அடுத்த உலகக் கோப்பை அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் 2026 ஜூன்-ஜூலை மாதங்களில் நடைபெற உள்ளது
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!