கிரிக்கெட் வீரரை கரம் பிடிக்கும் பிக்பாஸ் நடிகை!
Dinamaalai November 13, 2025 01:48 AM

 

பிக்பாஸ் தமிழ் சீசன் 4-ல் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை சம்யுக்தா. 2007ஆம் ஆண்டு ‘மிஸ் சென்னை’ பட்டம் வென்ற அவர், பின்னர் மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்குத் தாவினார். விஜய்யின் ‘வாரிசு’ படத்தில் நடித்ததுடன், ‘காஃபி வித் காதல்’, ‘துக்ளக் தர்பார்’, ‘மை டியர் பூதம்’ போன்ற படங்களிலும் நடித்தார். சம்யுக்தா, கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டார்; அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். ஆனால் சில காலமாக இருவரும் பிரிந்து, விவாகரத்து பெற்றதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில், தற்போது இரண்டாவது திருமணத்திற்குத் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. சம்யுக்தா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான அனிருதா ஸ்ரீகாந்தை திருமணம் செய்ய உள்ளார் என்ற தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து அவர் மறுப்பு தெரிவிக்காமல், “எல்லாமே இணையத்திலே இருக்கிறது. என்ன இருக்கிறதோ அது தான்” என கூறியதுடன், தீபாவளி பண்டிகையன்று அனிருதா உடன் எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார். இதனால் திருமண ஊகங்கள் மேலும் வலுத்துள்ளன.

அனிருதா, கிரிக்கெட் ஜாம்பவான் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய அனிருதா, தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக பணிபுரிந்து வருகிறார். அவர் முன்னதாக ஆர்த்தி வெங்கடேஷை திருமணம் செய்திருந்தார்; பின்னர் இருவரும் விவாகரத்து பெற்றனர். இப்போது சம்யுக்தா–அனிருதா ஜோடி இணையத்தில் ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.