திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை அடுத்த பலவூர் சிதம்பரபுரத்தைச் சேர்ந்த ஐயப்பன் (31) கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். திருமணமான இவர், இரு குழந்தைகளுக்கு தந்தை. சில நாட்களுக்கு முன் வேலைக்குச் சென்றபோது தெருநாய் ஒன்று கடித்தது. ஆனால் அவர் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் சிகிச்சை எடுக்காமல் விட்டுவிட்டார். சில நாட்களில் உடல்நிலை மோசமடைந்ததால் நாகர்கோவிலில் உள்ள ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஐயப்பனுக்கு ரேபிஸ் நோய் தொற்று இருப்பதை கண்டறிந்து தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தாலும் நிலைமை மோசமடைந்து, சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், நோயால் பாதிக்கப்பட்டிருந்த காலத்தில், ஐயப்பன் தனது மனைவியையும் தாக்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அவருக்கும் ரேபிஸ் நோய் தடுப்பூசி அளித்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!