2026-ஆம் ஆண்டில் வேற்றுகிரகவாசிகள் பூமிக்குள் நுழைய வாய்ப்பு - பாபா வாங்காவின் அதிர்ச்சியூட்டும் கணிப்புகள்!
Seithipunal Tamil November 13, 2025 03:48 AM


உலகெங்கிலும் நடந்த பல நிகழ்வுகளைத் துல்லியமாகக் கணித்ததாகக் கூறப்படும் பல்கேரியாவைச் சேர்ந்த மறைந்த பாபா வாங்காவின் (Baba Vanga) 2026-ஆம் ஆண்டுக்கான கணிப்புகள் தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளன.

சிறு வயதிலேயே கண்பார்வையை இழந்தாலும், எதிர்கால நிகழ்வுகளை முன்கூட்டியே அறியும் ஆற்றலைப் பெற்றதாகக் கருதப்படும் இவர், 1996-ஆம் ஆண்டு காலமானார். ஆனாலும், இவரது கணிப்புகள் இன்னும் விவாதிக்கப்படுகின்றன.

2026-க்கான முக்கிய கணிப்புகள்:

வரும் 2026-ஆம் ஆண்டில் உலகம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து பாபா வங்கா கணித்துள்ளதாகக் கூறப்படுபவை:

பொருளாதாரப் போர்: உலகின் கிழக்குப் பகுதியில் மிகப் பெரிய போர்கள் வெடிக்கும். இந்தக் கிளர்ச்சி மேற்கத்திய நாடுகளின் அழிவுக்குக் காரணமாக இருக்கும்.

புதிய தலைவர்: ரஷ்யாவிலிருந்து ஒரு சக்திவாய்ந்த தலைவர் உருவாகி, உலகின் முக்கிய அதிபராக இருப்பார்.

பொருளாதார நெருக்கடி: உலகப் போரினால் பொருளாதார நெருக்கடிகள் தீவிரமடையலாம். பணவீக்கம் மற்றும் தங்கத்தின் விலை உச்சத்தைத் தொடும்.

செயற்கை அறிவு (AI) சவால்: செயற்கை அறிவின் ஆதிக்கம் பலம் பெறும். இது வேலைவாய்ப்புகளில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு, பல சவால்களை உருவாக்கும்.

இயற்கைப் பேரிடர்கள்: வழக்கம் போல, வெள்ளம், வெப்ப அலைகள், மற்றும் நிலநடுக்கங்கள் போன்ற இயற்கைப் பேரிடர்கள் அதிகம் நிகழும்.

வேற்றுகிரகவாசிகள்: வேற்றுகிரகவாசிகள் பூமிக்குள் நுழைய வாய்ப்புள்ளது.

இக்கணிப்புகளுக்கு அறிவியல் சான்றுகள் இல்லை என்றாலும், மக்கள் மத்தியில் இது அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.