Elon Musk: விநாயகர் சிலை குறித்து AI-ல் தேடிய எலான் - பதிலால் வியந்த நெட்டிசன்கள்!
Vikatan November 13, 2025 03:48 AM

X வலைதளத்தின் உரிமையாளரும் உலகின் மிகப்பெரிய பணக்காரர்களுள் ஒருவருமான எலான் மஸ்க், கோர்க் செயற்கை நுண்ணறிவுடனான தனது கலந்துரையாடலைப் பகிர்ந்துள்ளார்.

கோர்க் எலான் மஸ்கின் xAI நிறுவனத்தால் டெவலப் செய்யப்படும் chatbot ஆகும். அதில் இந்து தெய்வமான விநாயகரின் படத்தைப் பகிர்ந்து அது என்னவென்று கேட்டுள்ளார் மஸ்க்.

புகைப்படத்தை ஆராய்ந்த செயற்கை நுண்ணறிவு விநாயகரின் உருவத்தை சரியாக கண்டுபிடித்ததுடன், விநாயகர் குறித்தும் விளக்கிக் கூறியுள்ளது.

"இது பரவலாக மதிக்கப்படும் இந்து கடவுளான கணேசரின் சிறிய பித்தளை (அல்லது வெண்கல) சிலை.

முக்கிய அடையாள அம்சங்கள்: ஒற்றை தந்தத்துடன் கூடிய யானைத் தலை, மோடகம் போன்ற பாரம்பரிய பொருட்களைத் தாங்கிய நான்கு கைகள், தலைக்குப் பின்னால் அலங்கார வளைவுடன் தாமரை அடிவாரத்தில் அமர்ந்திருக்கும் தோரணை. கீழே இருக்கும் எலி விநாயகரின் வாகனத்தைக் குறிக்கிறது." எனப் பதிலளித்துள்ளது AI.

Netizen's Reaction

மேலும் அது பாரம்பரிய தென்னிந்திய பித்தளை சிலை என்றும் சரியாகக் கூறியிருக்கிறது.

கோர்க் ஏஐ துல்லியமாகவும் கலாச்சார முக்கியத்துவத்துடனும் பதலிலளித்துள்ளது பலருக்கு ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கிறது. மறுபக்கம் எலான் மஸ்குக்கு இந்திய தெய்வங்கள் மீதான ஆர்வம் சிலரின் கவனத்தைப் பெற்றுள்ளது.

கோர்க் செயலி மூலமும் எக்ஸ் செயலி மற்றும் தளத்திலும் கோர்க் chatbot காணப்படுகிறது.

Job Interview: "என்னை நேர்காணல் செய்தவர் மனிதரே இல்லை" - AI குழப்பத்தில் ரெட்டிட் பயனர்!
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.