தங்கம் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,760 உயர்ந்ததால் நகை வாங்குவோரும் வியாபாரிகளும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த மாத தொடக்கத்திலிருந்து தங்கம் விலை ஏற்றத் தாழ்வுடன் இயங்கி வந்தது. சில நாட்களில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டாலும், அடுத்தவேளையில் அதே வேகத்தில் மீண்டும் உயர்வதும் தொடர்ந்தது. நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.4 உயர்ந்து ரூ.11,480-ஆக இருந்த நிலையில், நேற்று காலையில் கிராமுக்கு ரூ.220 உயர்ந்து ரூ.11,700-ஆகவும், பவுனுக்கு ரூ.1,760 உயர்ந்து ரூ.93,600-ஆகவும் உயர்ந்தது.
இதனால் கடந்த இரண்டு நாட்களில் மட்டுமே தங்கம் விலை மொத்தம் ரூ.3,200 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல் வெள்ளி விலையும் ரூ.1 உயர்ந்து ஒரு கிராமுக்கு ரூ.170-ஆகவும், பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயாகவும் விற்பனையானது.

வரும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை காலத்தில் தங்கம் வாங்கும் பழக்கம் அதிகரிக்கும் நிலையில், விலை ஏற்றம் நகை வாங்குவோருக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது. நகை வியாபாரிகள்“ சர்வதேச சந்தையில் டாலர் மதிப்பு, அமெரிக்க பொருளாதார நிலை மற்றும் கச்சா எண்ணெய் விலை ஆகியவை தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணம்” என தெரிவித்தனர். நிதி வல்லுநர்கள், “பண்டிகை காலம் நெருங்குவதால் தேவை அதிகரிக்கும். இதனால் தங்கம் விலை மேலும் உயரும் வாய்ப்பும் உள்ளது” என எச்சரிக்கின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!