டெல்லியை உலுக்கிய குண்டுவெடிப்பு.. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவித்த முதல்வர்..!!
SeithiSolai Tamil November 13, 2025 04:48 AM

கடந்த திங்கட்கிழமை மாலை செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் கேட் எண் 1 அருகே உள்ள போக்குவரத்து சிக்னலில் கார் வெடித்ததில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 13 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ₹10 லட்சம் கருணைத் தொகையாக வழங்கப்படும் என டெல்லி முதல்வர் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

“>

 

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், “டெல்லியில் நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் முழு நகரத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தச் சம்பவத்தில் நிரந்தரமாக ஊனமுற்றவர்களுக்கு ₹5 லட்சம் மற்றும் பலத்த காயமடைந்தவர்களுக்கு ₹2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும், காயமடைந்த அனைவருக்கும் உரிய தரமான மருத்துவ சிகிச்சையை அரசே உறுதி செய்யும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.