இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் கருப்பு… விரைவில் வெளியாகும் ரீலீஸ் அப்டேட்!
TV9 Tamil News November 13, 2025 07:48 AM

கோலிவுட் சினிமாவில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா தனது 45-வது படத்திற்காக இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியுடன் கூட்டணி வைத்தார். இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. மேலும் இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்கிறார் என்ற அப்டேட் ரசிகர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி இவர்கள் இருவரும் இணைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு ஜோடி சேர்ந்தது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இந்தப் படத்திற்கு கருப்பு என்று படக்குழு பெயர் வைத்தது. மேலும் படம் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. அதன்படி இந்தப் படத்தில் இருந்து முன்னதாக டீசர் வீடியோ வெளியானது. அதனைப் பார்த்த ரசிகர்கள் இது சூர்யா நடிப்பில் முன்னதாக வெளியான எதர்க்கும் துணிந்தவன் மாதிரி உள்ளது என்று தெரிவித்தனர். ஆனால் ஆர்.ஜே.பாலாஜி மீது நம்பிக்கை இருப்பதாகவும் படம் சிறப்பாக இருக்கும் என்றும் கருத்து தெரிவித்தனர். இப்படி அவர்கள் தெரிவிக்க காரணம் முன்னதாக ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று இருந்ததுதான்.

கருப்பு படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் எப்போது வெளியாகும்:

இந்த நிலையில் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் கடந்த இரண்டு வாரங்களாக நடந்து வருகின்றது. இதில் நடிகர்கள் சூர்யா மற்றும் த்ரிஷா இருவரும் விறுவிறுப்பாக நடித்து வருகின்றனர். மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த பிறகு படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… அருள் நிதி – மம்தா மோகந்தாஸ் நடிப்பில் உருவாகும் மை டியர் சிஸ்டர் – அறிமுக வீடியோ இதோ

இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:

🔥 #Karuppu – Final Schedule Update 🔥

— 🎬 The final schedule of Karuppu is currently underway in Chennai for two weeks.
— 🌟 #RjBalaji & #Trisha are actively part of this schedule.
— 🦁 #Suriya is expected to join for a brief portion.
— 🗓️ The release date announcement is… pic.twitter.com/R4Xv3mOrRP

— Movie Tamil (@_MovieTamil)

Also Read… நெபோட்டிசம் குறித்து வெளிப்படையாக பேசிய துல்கர் சல்மான் – வைரலாகும் வீடியோ

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.