“தவறு தான்...” ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்திற்காக மன்னிப்பு கோரினார் நடிகர் பிரகாஷ் ராஜ்!
Dinamaalai November 13, 2025 06:48 PM

ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த நடிகர் பிரகாஷ் ராஜ், ரானா, விஜய் தேவரகொண்டா, மஞ்சு லட்சுமி உட்பட 29 பேருக்கு ஹைதராபாத் சிஐடி சிறப்பு விசாரணை குழு, நோட்டீஸ் அனுப்பி ஒவ்வொருவராக விசாரணைக்கு அழைத்து விளக்கம் கேட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று நடிகர் பிரகாஷ் ராஜ் இந்த விவகாரம் தொடர்பாக சிஐடி அலுவலகத்தில் ஆஜராகி, அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார்.மேலும், சில வங்கி கணக்கு விவரங்களையும் அவர் சிறப்பு விசாரணை குழுவிடம் சமர்பித்தார்.

விசாரணை நடந்து முடிந்த பின்னர் பிரகாஷ்ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “2016ல் நான் ஒரு செயலிக்கு பிரமோஷன் செய்தேன். அந்த செயலி 2017ல் ஆன்லைன் சூதாட்ட செயலியாக மாற்றப்பட்டது. இதனை அறிந்து அந்த ஒப்பந்தத்தை நான் ரத்து செய்து கொண்டேன். தெரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் தவறு, தவறு தான் என்பதால் இது தொடர்பாக பொதுமக்களிடம் நான் மன்னிப்பு கோருகிறேன்” என்றார். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.