மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை தயாரிக்க கர்நாடக அரசுக்கு அனுமதி அளித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இந்திய உச்சநீதிமன்றம், மேகதாது அணைக்கான திட்ட அறிக்கையை உருவாக்க கர்நாடகாவுக்கு அனுமதி அளித்துள்ளது. ஆனால், அந்த அறிக்கை மத்திய நீர் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு தமிழ்நாடு அரசு, காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றின் கருத்து கேட்ட பிறகே முடிவு எடுக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டின் ஜீவநதி காவிரி. அதனை நம்பித்தான் டெல்டா மாவட்ட விவசாயிகள் வாழ்கிறார்கள். மேலும், 20-க்கும் மேற்பட்ட மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் காவிரி உள்ளது. இந்நிலையில், மேகதாதுவில் அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கைக்கு அனுமதி வழங்கியுள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பு மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது” என்று கூறியுள்ளார்.

அவர் மேலும், “கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கடுமையாக வாதிக்காமல், திமுக அரசு மௌனமாக இருந்ததே இந்த தீர்ப்புக்கு வழிவகுத்தது. இதற்குப் பொறுப்பு திமுக அரசுக்கே உண்டு. கர்நாடகாவில் தங்களது குடும்பத் தொழில்களை காப்பாற்றும் நோக்கில் திமுக ஆட்சியாளர்கள் தமிழகத்தின் நலனை புறக்கணித்துள்ளனர்” என குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், “மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டின் நீர்வரத்து குறைந்து விவசாயிகளும் மக்களும் கடும் பாதிப்புக்குள்ளாகுவார்கள். அதனால், தமிழகத்தின் உரிமையை மீட்க திமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!