தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) ஒரு கவுன்சிலர் கூட இல்லாத நிலையில், அதன் நிர்வாகி அருண்ராஜ் பேசிய கருத்து அரசியல் நாகரீகத்திற்கு உகந்ததல்ல என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் புதுக்கோட்டையில் இன்று (நவ.13) கடுமையாக விமர்சித்துள்ளார்.
“பாஜக, திமுகவைத் தவிர வேறு யாருடனும் கூட்டணி அமைப்போம்” என்று த.வெ.க. நிர்வாகி அருண்ராஜ் கூறியது குறித்துச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், “நாங்கள் யாரையும் கூட்டணிக்கு அழைக்கவில்லை. அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை, நிரந்தரப் பகைவரும் இல்லை என்பதுதான் எங்களின் நிலைப்பாடு. ஆனால், த.வெ.க.வில் கவுன்சிலர் ஒருவர்கூட இல்லை. அதற்குள் அவர்கள் இப்படிப் பேச வேண்டுமா? இதனைப் பற்றி அவர்கள் யோசிக்க வேண்டும்” என்று காட்டமாகத் தெரிவித்தார்.