Tere Ishq Mein: மீண்டும் ஒரு காதல் காவியம்.. தனுஷின் 'தேரே இஷ்க் மே பட ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
TV9 Tamil News November 14, 2025 01:48 AM

இந்திய சினிமாவில் ஹாலிவுட் வரை தனது புகழை பரப்பிய நடிகர்களில் ஒருவர்தான் தனுஷ் (Dhanush). இவர் தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக இருந்தாலும், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் நாயகனாக நடித்துவருகிறார். அந்த வகையில் இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான படம்தான் இட்லி கடை (Idli Kadai). இந்த திரைப்படத்தை நடிகர் தனுஷ் இயக்கி, நாயகனாக நடித்திருந்தார். இந்த படமானது அவருக்கு அந்த அளவிற்கு வரவேற்பை கொடுக்காவிட்டாலும், மக்களிடையே பாசிடிவ் விமர்சனங்களை பெற்றிருந்தது. இப்படத்தை அடுத்தாக தனுஷின் நடிப்பில் வெளியீட்டிற்கு காத்திருக்கும் படம்தான் தேரே இஷ்க் மே (Tere Ishq Mein ). இந்தி மற்றும் தமிழ் போன்ற மொழியில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்க, நடிகை கிருத்தி சனோன் (Kriti Sanon) இணைந்து நடித்துள்ளார்.

இந்த படத்தை ராஞ்சனா, அத்ரங்கி ரே போன்ற தனுஷின் படங்களை இயக்கிய பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல். ராய் (Anand L. Rai) தான் இப்படத்தையும் இயக்கியுள்ளார். இந்த படமானது மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ளாள் நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது என தனுஷ் அறிவித்துள்ளார். அதன்படி, இந்த தேரே இஷ்க் மே பட ட்ரெய்லர் நாளை 2025 நவம்பர் 14ம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பராசக்திக்கு பிறகு சிவகார்த்திகேயனுடன் இணையும் இயக்குநர் இவர்தான்? ஷூட்டிங் எப்போது தெரியுமா?

தேரே இஷ்க் மே பட ட்ரெய்லர் ரிலீஸ் தேதி குறித்து தனுஷ் வெளியிட்ட பதிவு :

Tere ishk mein .. Trailer Tom pic.twitter.com/GT4F5JtVaF

— Dhanush (@dhanushkraja)

தனுஷின் தேரே இஷ்க் மே திரைப்படத்தின் கதை என்ன?

இந்த தேரே இஷ்க் மே திரைப்படத்தில் நடிகர் தனுஷ் அதிரடி கல்லூரி மாணவனாக நடித்துள்ளார். மேலும் அதே கல்லூரியில் பயிலும் அமைதியான மாணவி வேடத்தில் நடிகை கிருத்தி சனோன் நடித்துள்ளார். கல்லூரியில் அதிரடி மாணவனாக இருக்கும் தனுஷின் அன்பினால் ஈர்க்கப்படுகிறார் கதாநாயகி, அதை தொடர்ந்து இவர்கள் இருவரும் காதல் செய்கின்றனர்.

இதையும் படிங்க: மழைக்கு கோரிக்கை வைத்த நடிகர் ஆர்யா… வைரலாகும் போஸ்ட்!

இதில் சில காரணங்கள் பிடிக்காமல் போக நாயகி தனுஷை விட்டு விலகிவிடுகிறார். அதன் பிறகு வேறு ஒருவரை காதலித்து திருமணம் செய்யும் முடிவிற்கு செல்கிறார். இந்த திருமணத்தை தடுக்கும் விதத்தில் தனுஷ் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் இறுதியில் இருவரும் சேர்ந்தார்களா? அல்லது பிரிந்தார்களா என்பதுதான் இப்படத்தின் மைய கரு என கூறப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.