அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட சீரியல் நடிகர் தினேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு அரசுப் பணி வாங்கித் தருவதாக உறுதி அளித்து, அவரிடம் நடிகர் தினேஷ் ரூ.3 லட்சம் பணம் பெற்றுள்ளார். ஆனால், குறிப்பிட்டபடி வேலையும் வாங்கித் தராமல், பணத்தையும் திரும்பக் கொடுக்காமல் அவர் மோசடி செய்ததாகத் தெரிகிறது.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை அவரிடம் முறையிட்டபோது, தினேஷ் அவரையும் தாக்கியுள்ளார் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், மோசடி மற்றும் தாக்குதல் வழக்கில் சீரியல் நடிகர் தினேஷ் கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.