Theeyavar Kulai Nadunga: விறுவிறுப்பான கதையில்… அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷின் 'தீயவர் குலை நடுங்க' ட்ரெய்லர் வெளியானது!
TV9 Tamil News November 14, 2025 05:48 AM

தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் மிகவும் பிரபலமான நடிகராக இருந்துவருபவர் அர்ஜுன் (Arjun Sarja). இவரின் நடிப்பில் தொடர்ந்த பிரம்மாண்ட திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இவரின் இயக்கத்தில் இறுதியாக “சீதா பயணம்” Sita Payanam) என்ற படமானது வெளியாகியிருந்தது. இந்த படமானது இவருக்கு கலவையான விமர்சனங்களை கொடுத்திருந்தது. அந்த வகையில் இவர் தமிழில் நடித்துவந்த திரைப்படம்தான் தீயவர்கள் குலை நடுங்க (Theeyavar Kulai Nadunga). இந்த படத்தில் நடிகர் அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடிக்கும் நிலையில், அவருடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் (Aishwarya rajesh) இணைந்து நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2024ம் ஆண்டில் தொடங்கிய நிலையில், தற்போது வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது. இந்த படத்தை அதிமுக இயக்குநர் தினேஷ் லக்ஷ்மணன் (Dinesh Lakshmanan) இயக்க, ஜி.எஸ் ஆர்ட் என்ற தயாரிப்பு நிறுவனமானது தயாரித்துள்ளது.

அதிரடி திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் 2025 நவம்பர் 21ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதை முன்னிட்டு இன்று 2025 நவம்பர் 13ம் தேதியில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க: காந்தா படம் அவரின் பயோ பிக் இல்லை… ரசிகர்களுக்கு விளக்கம் கொடுத்த துல்கர் சல்மான்!

அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷின் தீயவர்கள் குலை நடுங்க பட ட்ரெய்லர் பதிவு :

#TheeyavarKulaiNadunga Trailer is Out Now !!
🔗https://t.co/bBN0ejuMd7

An investigation thriller starring Arjun & Aishwarya Rajesh. Releasing on theatres from Nov 21s💥 pic.twitter.com/GDp2TfJA4g

— AmuthaBharathi (@CinemaWithAB)

இந்த தீயவர்கள் குலை நடுங்க படமானது முற்றிலும் ஓர் ஆக்ஷன் மற்றும் க்ரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இப்படத்தில் அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இருவருமே நெகடிவ் கலந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படமானது கொலையை சார்ந்த கதைக்களத்தில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : சின்ன வயசு க்ரஷ் யார்? ரசிகரின் கேள்விக்கு நடிகை ராஷ்மிகா ஓபன் டாக்

இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் வேடம் மிகவும் வித்தியாசமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது வரும் 2025 நவம்பர் 21ம் தேதியில் வெளியாக காத்திருக்கும் நிலையில், தற்போது படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றுவருகிறது.

ஐஸ்வர்யா ராஜேஷின் கைவசம் உள்ள படங்கள் :

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவை அடுத்ததாக தற்போது முழுக்க தெலுங்கு படங்களில் நடித்துவருகிறார். மேலும் கன்னடத்தில் உத்ரகாந்தா என்ற படத்திலும் நடித்துவருகிறார். மேலும் இவர் தனுஷின் நடிப்பில் உருவாக்கவுள்ள வட சென்னை 2 படத்திலும் கதாநாயகியாக நடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் ஷூட்டிங் 2026ம் ஆண்டில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.