Dulquer Salmaan: காந்தா படம் அவரின் பயோ பிக் இல்லை… ரசிகர்களுக்கு விளக்கம் கொடுத்த துல்கர் சல்மான்!
TV9 Tamil News November 14, 2025 05:48 AM

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகனாக இருந்து வருபவர் துல்கர் சல்மான் (Dulquer Salmaan). இவரின் நடிப்பிலும், தயாரிப்பிலும் மிக பிரம்மாண்டமாக தயாராகியுள்ள படம்தான் காந்தா (Kaantha). இப்படத்தை இயக்குநர் செல்வமணி செல்வராஜ் (Selvamani Selvaraj) இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் சில தெலுங்கு படங்களை இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் துல்கர் சல்மான், பாக்யஸ்ரீ போர்ஸ் (Bhagyashri Borse), ராணா (Rana) மற்றும் சமுத்திரக்கனி இணைந்து நடித்துள்ளனர். இதில் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸிற்கு முதல் தமிழ் திரைப்படம் ஆகும். இந்த காந்தா படத்தை துல்கர் சல்மானுடன் இணைந்து நடிகர் ராணாவும் தயாரித்துள்ளார். மிக பிரம்மாண்டமான கதைக்களத்தில் உருவான இப்படம், வரும் 2025 நவம்பர் 14ம் தேதி முதல் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

இதை தொடர்ந்து சமீபகாலமாக இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் பிரம்மாண்டமாக நடைபெற்றுவந்தது. இந்நிலையில் சமீபத்தில் நேர்கணல் ஒன்றில் பேசிய துல்கர் சல்மான், இந்த காந்தா படம் முழுவதும் உண்மை கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கவில்லை என தெளிவுபடுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: ரஜினிகாந்தின் தலைவர்173 படத்திலிருந்து விலகிய சுந்தர் சி? குஷ்புவால் குழம்பிய ரசிகர்கள்!

காந்தா படம் குறித்து ரசிகர்களுக்கு தெளிவுபடுத்திய துல்கர் சல்மான்:

அந்த நேர்காணலில் பேசிய துல்கர் சல்மான் பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருந்தார். அதை தொடர்ந்து பேசிய இவர், “இந்த காந்தா படத்திற்கும் நடிகர் எம்.கே. தியாகராஜ பாகவதருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. இப்படமானது அவரின் வழக்கை வரலாற்றை பற்றிய கதை இல்லை.

இதையும் படிங்க: சிலம்பரசனின் அரசன் படம் குறித்து வைரலாகும் அப்டேட் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

அந்த வகையில் இந்த படத்தின் சில காட்சிகளில் அவரிடம் இருந்து ஈர்க்கப்பட்ட சில விஷயங்கள் இருக்கலாம். இந்த படம் எம்.கே. தியாகராஜ பாகவதரின் பயோ பிக் இல்லை, கற்பனை கதை” என நடிகர் துல்கர் சல்மான் தெளிவுபடுத்தியுள்ளார். இது தொடர்பான தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

காந்தா திரைப்படம் குறித்து நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்ட பதிவு:

The world of Kaantha unfolds today!💎
TRAILER OUT NOW!💥

Tamil – https://t.co/BrNytjBTok

Telugu – https://t.co/NUKPj5wKg8

A @SpiritMediaIN and @DQsWayfarerFilm production 🎬#Kaantha #DulquerSalmaan #RanaDaggubati #SpiritMedia #DQsWayfarerfilms #Bhagyashriborse…

— Dulquer Salmaan (@dulQuer)

இந்த காந்தா படமானது கடந்த 2025 செப்டம்பர் மாதத்திலே வெளியாகவேண்டியது, லோகா படத்திற்கு பிரம்மாண்ட வரவேற்பு இருந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த படமானது ஒரு பழங்காலத்து கதையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.