கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நாயகனாக தற்போதுவரை இருந்துவருபவர் ரஜினிகாந்த் (Rajinikanth). இவரின் நடிப்பில் இறுதியாக கூலி (Coolie) படமானது வெளியான நிலையில், அதைத் தொடர்ந்து இயக்குநர் நெல்சன் திலீப்குமாருடன் (Nelson Dilipkumar) இணைந்து ஜெயிலர் 2 (Jailer 2) படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மேலும் ஒரு படத்தில் இணைந்திருந்தார். இந்த படம்தான் தலைவர்173 (Thalaivar 173). இந்த படத்தை இயக்குநரும், நடிகருமான சுந்தர் சி (Sundar C) இயக்க, கமல்ஹாசனின் (Kamal Haasan) ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமானது தயாரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பானது கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகியிருந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சுந்தர் சி மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் ஏற்கனவே “அருணாச்சலம்” என்ற படமானது வெளியாகியிருந்த நிலையில், கிட்டத்தட்ட 28 வருடங்களுக்கு பின் மீண்டும் இணைந்திருந்தது.
இந்நிலையில் இயக்குநர் சுந்தர் சி இந்த தலைவர் 173 திரைப்படத்திலிருந்து சில காரணங்களால் விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த பதிவை நடிகை குஷ்பு சுந்தர் (Khushbu Sundar) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த தகவலை பகிர்ந்த சில நிமிடங்களில் அதை நீக்கிவிட்டார். இது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சிலம்பரசனின் அரசன் படம் குறித்து வைரலாகும் அப்டேட் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
தலைவர் 173 திரைப்படத்திலிருந்து விலகினாரா சுந்தர் சி :WTH ?😳 What happened ?😳 #Thalaivar173
Why is this posted & deleted @khushsundar mam? pic.twitter.com/rN4GU9jCZL
— Kingsley (@CineKingsley)
தலைவர் 173 திரைப்படத்தை சுந்தர் சி இயக்க, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கவிருந்தார். இந்த படத்தை நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் படங்கள் நடித்துவந்த நிலையில், அதற்கு மாற்றாக கமல்ஹாசனின் தயாரிப்பில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தின் இசையமைப்பாளர் யார்?, நடிகர்கள் யார் என்பது தொடர்பான எந்தவித அறிவிப்புகளும் இன்னும் வெளியாகவில்லை.
இதையும் படிங்க: பிக்பாஸ் கொளுத்திப்போட்ட டாஸ்க்… சரவெடியாய் வெடிக்கும் போட்டியாளர்கள்
மேலும் இந்த படத்தின் ஷூட்டிங் 2026ம் ஆண்டு ஜனவரி இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2027ம் ஆண்டு பொங்கலுக்கு இப்படத்தை வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் நடிகை குஷ்பு சுந்தர் வெளியிட்ட பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்திலிருந்து சுந்தர் சி விலகுவதாக ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும் எந்தவித அறிவிப்புகளையும் இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இது தொடர்பான அறிவிப்புகள் மற்றும் விளக்க பதிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.