உங்கள் மீதே பாலியல் புகார் கொடுப்பேன்.. காதலனுக்காக தந்தையை மிரட்டிய 17 வயது மகள்..!
WEBDUNIA TAMIL November 14, 2025 07:48 AM

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் பகுதியில் கட்டட தொழிலாளி ஒருவர், மனைவி பிரிந்து சென்றதால், 17 வயது மகள் மற்றும் மகனை வளர்த்து வந்தார். ஒரு வழக்கில் ஜாமீன் கிடைக்காததால் அவர் தலைமறைவானார்.

இந்த சமயத்தில், 17 வயது மகளின் காதலன் கடந்த ஒரு வாரமாக வீட்டுக்கு சென்று உணவு கொடுத்து ஆறுதல் கூறி வந்துள்ளார். மேலும், அவர்கள் இருவரும் வீட்டில் தனியாக சந்தித்துள்ளனர்.

இந்த நிலையில் ஜாமீனில் வீடு திரும்பிய தந்தை, காதலனுடன் தனியாக இருந்த மகளை கையும் களவுமாகப் பிடித்து கண்டித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த தந்தை, மகளையும் காதலனையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். அப்போது மகள், "நீதான் என்னிடம் தவறாக நடக்க முயன்றாய் என்று கூறி, உன் மீதே போக்சோ வழக்குத் தொடருவேன்" என்று தந்தையை மிரட்டியுள்ளார்.

மகளின் இந்த மிரட்டலால் மனமுடைந்த தந்தை, காவல் நிலையம் சென்றும் புகார் எதுவும் அளிக்காமல் திரும்பி சென்றார். இந்த சச்சரவில் மாணவியை தனியாக விட முடியாது என்பதால், காவல்துறையினர் அவருடைய தாயை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைத்தனர். காவல் நிலையத்திற்கு வந்த தாய் மகளை அழைத்து சென்றார். தந்தை புகார் அளிக்காததால், மாணவியுடன் இருந்த வாலிபரை எச்சரித்து மட்டும் காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

Edited by Siva

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.