தெருநாய்களை தங்களது வீட்டில் வைத்து மனைவி அதிக அக்கறை காட்டி வளர்ப்பதால் தங்களது தாம்பத்திய உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறி ஒரு 41 வயது நபர் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு பதிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அந்த நபர் தன்னுடைய மனுவில், "என்னுடைய மனைவி தெரு நாய்களை, வீட்டில் வைத்து பராமரித்து வருகின்றார். அந்த தெரு நாய்களால் வீட்டில் இருப்பவர்களின் உணவு, உறக்கம், சுத்தம் என்ற அனைத்தும் பாதிக்கப்படுகிறது. என் வாழ்க்கையில் தற்போது அமைதியே இல்லை. மேலும், தாம்பத்திய உறவில் கூட எங்களுக்குள் நெருக்கம் இல்லாமல் போய்விட்டது.
இதற்கு காரணம், அவர் தெரு நாய்களை வைத்து பராமரிப்பது தான். நான் பலமுறை இது குறித்து மனைவியை எச்சரித்து விட்டேன். ஆனால், அவர் என் பேச்சை மதிப்பதில்லை. எங்களுக்குள் ஒத்து வராது. எனவே, நீதிமன்றம் எங்களுக்கு விவாகரத்து வேண்டு." என்று தெரிவித்துள்ளார். இந்த வழக்கை நீதிமன்றம் விசாரித்து இருவருக்கும் சமரசத்தை ஏற்படுத்த முயற்சித்துள்ளது.
இதையும் படிங்க: "தள்ளிப்படுக்க எதுக்குடா கல்யாணம்?" கணவரை ஆள் வைத்து அடித்த மனைவி.. கணவன் அதிர்ச்சி முடிவு.!
ஆனால், அந்த கணவர் விவாகரத்து வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கின்றார். மனைவி விலங்குகள் மீது காட்டிய அன்பினால் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சனை நீதிமன்றம் வரை சென்று இருப்பது தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாத பொருளாகியுள்ளது.