திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அச்சமங்கலம் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவருக்கு 42 வயதான பாக்யராஜ் என்ற மகன் இருந்துள்ளார். திருமணமாகி இரு பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில் பாக்கியராஜ் வெல்டிங் வேலை செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் பாக்கியராஜ் ஜோலார்பேட்டை அருகே இருக்கும் அரசு பள்ளி ஒன்றில் படித்து வரும் 6ம் வகுப்பு சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு அந்த பெண்ணை யாரிடமும் இது குறித்து சொல்லக்கூடாது என மிரட்டல் விடுத்துள்ளார். அவரது மிரட்டலை மீறி சிறுமி தனக்கு நடந்த கொடுமையை தன் பெற்றோரிடம் தெரிவித்து இருக்கிறார்.
இதனால், அதிர்ச்சியடைந்த குழந்தையின் பெற்றோர் உடனடியாக திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் பாக்யராஜை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சியாமளா தேவி சிறுமியிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட பின்னர் பாக்யராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இதையும் படிங்க: "உன்ன கல்யாணம் பண்ணிக்கிறேன்..." திருமண ஆசை காட்டி சிறுமிக்கு பாலியல் தொல்லை.!! பெயிண்டர் அதிரடி கைது.!!
தொடர்ந்து, திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட பாக்கியராஜ் குற்றம் நிரூபிக்கப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அந்த சிறுமி தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட வேண்டாம் என்று எவ்வளவோ கெஞ்சி கேட்டும் காம கொடூரன் பாக்யராஜ் அடங்காமல் அந்த பெண்ணை துன்புறுத்தி இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.