வார இறுதி விடுமுறை மற்றும் முகூர்த்த நாட்களை முன்னிட்டு, வெளியூருக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இயந்திர வாழ்க்கையில் ஓய்வு பெறும் சிறு நேரம் கிடைத்தாலே வெளியூர் சுற்றும் மக்களுக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது: நவம்பர் 14 (வெள்ளி), 15 (சனி), மற்றும் 16 (ஞாயிறு) ஆகிய நாட்களில் சென்னையிலிருந்தும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலாக பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். கோயம்பேட்டிலிருந்து வேளாங்கண்ணி, திருவண்ணாமலை, நாகை, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தலா 55 பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல் மாதவரத்தில் இருந்து 20 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மேலும், கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, மதுரை, கன்னியாகுமரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 340 பேருந்துகளும் சனிக்கிழமை 350 பேருந்துகளும் இயக்கப்படும். திரும்பி வரும் பயணிகளுக்காக ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பு சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதுவரை 17,000க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளதாகவும், கூட்ட நெரிசலை தவிர்க்க www.tnstc.in
இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்யுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!