தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பெரும் நிம்மதி அளிக்கும் அறிவிப்பை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (DA) உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக 55% ஆக வழங்கப்பட்ட அகவிலைப்படி, இப்போது 58% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு ஜூலை 1 முதல் பின்விளைவுடன் வழங்கப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், அகவிலைப்படி உயர்வால் ஆண்டுதோறும் ரூ.1,829 கோடி கூடுதல் செலவினம் அரசுக்கு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் இதன் மூலம் சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நேரடியாக பலன் பெறவுள்ளனர்.இந்த அறிவிப்பு வெளியாகியவுடன், அரசு ஊழியர் வட்டாரங்களில் மகிழ்ச்சி அலை எழுந்துள்ளது.
“விலைவாசி உயர்வை சமநிலைப்படுத்தும் ஒரு நியாயமான முடிவு இது” என ஊழியர் சங்கங்கள் பாராட்டு தெரிவித்துள்ளன.