தென்கொரிய முன்னாள் பிரதமர் கைது... அவசரநிலை பிரகடன விவகாரம் மீண்டும் பரபரப்பு!
Dinamaalai November 14, 2025 10:48 AM

தென்கொரியாவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட அரசியல் அதிர்வலைக்கு காரணமான ‘அவசரநிலை பிரகடனம்’ விவகாரம் மீண்டும் சூடு பிடித்துள்ளது. அந்த விவகாரத்தில் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுடன் தொடர்புடையவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்கின்றன.

கடந்த ஆண்டு டிசம்பரில், ஊழல் குற்றச்சாட்டில் விசாரணையை எதிர்கொண்டு வந்த அதிபர் யூன் சுக் இயோல் திடீரென நாடு முழுவதும் அவசரநிலையை பிரகடனம் செய்தார். இது விசாரணையிலிருந்து தப்பிக்க எடுத்த முயற்சி என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில், சில வாரங்களிலேயே அந்த அவசரநிலை திரும்பப் பெறப்பட்டது. பின்னர், அதிபர் பதவியிலிருந்து யூன் சுக் இயோல் நீக்கப்பட்டார்; புதிய அரசு பொறுப்பேற்றது.

இந்த வழக்கில் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறி யூன் சுக் இயோலை போலீசார் சில வாரங்களுக்கு முன்பே கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, அவசரநிலை பிரகடனத்திற்கு ஆதரவாக செயல்பட்டதாகக் கூறப்படும் முன்னாள் பிரதமர் வாங்க் ஹொ யன் மற்றும் முன்னாள் உளவுத்துறை தலைவர் ஷொ டெய் யங் ஆகியோரும் நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரும் அந்த அவசரநிலை அறிவிப்பில் நேரடியாகப் பங்கேற்று, அதனை அமல்படுத்த முக்கிய பங்கு வகித்ததாக விசாரணை அமைப்புகள் கூறுகின்றன. தற்போது இந்த வழக்கில் விசாரணை மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், தென்கொரிய அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.