நாடு முழுவதும் எதிர்பார்ப்பு... பீகாரில் ஆட்சியைப் பிடிப்பது யார்? இன்று வாக்கு எண்ணிக்கை ஆரம்பம்!
Dinamaalai November 14, 2025 10:48 AM

பீகார் மாநிலத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார் என்கிற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் எழுந்துள்ளது. பீகார் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 2 கட்டங்களாக நிறைவடைந்த நிலையில், இன்று காலை வாக்கு எண்ணிக்கை துவங்குகிறது. மொத்தம் 243 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட பீகார் மாநிலத்தில், முதல் கட்டமாக கடந்த 6ம் தேதி 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 65.09 சதவீதம் வாக்குகள் பதிவாகின. அதனைத் தொடர்ந்து மீதமுள்ள 122 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 11ம் தேதி நடைபெற்றது.

இரண்டாம் கட்ட தேர்தலில் 69 சதவீதம் வரை வாக்குகள் பதிவாகி, இது முதல்கட்டத்தை விட அதிகமாக இருந்தது. குறிப்பாக முஸ்லிம் பெரும்பான்மையுள்ள கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் 76.23 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றது.

இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் கணக்கிடப்படும். மதியம் 12 மணிக்குள் எந்தக் கூட்டணி ஆட்சியை அமைக்கப் போகிறது என்பது தெளிவாகும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பீகார் சட்டசபையில் ஆட்சியை அமைக்க 122 இடங்கள் தேவைப்படுகிறது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் படி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. - தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. பீகார் முழுவதும் வாக்கு எண்ணிக்கையை மையமாகக் கொண்டு அரசியல் சூழ்நிலை பரபரப்பாகியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.