தங்கம் விலை ரூ.95 ஆயிரத்தை கடந்தது... ஒரே நாளில் ரூ.2,400 உயர்வு..!
Newstm Tamil November 14, 2025 10:48 AM

தங்கம் விலை கடந்த மாதம் 17-ம் தேதி ஒரு சவரன் ரூ.97,600 என உச்சத்தில் இருந்த நிலையில், அதன் பின்னர் படிப்படியாக குறைந்தது. கடந்த 4-ம் தேதி ஒரு சவரன் ரூ.90 ஆயிரம் என்ற நிலைக்கு வந்தது. விலை ஏற்ற-இறக்கம் என்ற நிலையிலேயே கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக நீடித்து இருந்தது.

இதற்கிடையே, கடந்த 10-ம் தேதியில் இருந்து மீண்டும் எகிறத் தொடங்கியது. 10, 11-ம் தேதிகளில் கிராமுக்கு ரூ.400-ம், சவரனுக்கு ரூ.3,200-ம் உயர்ந்து இருந்தது. கடந்த 3 நாட்களுக்கு முன் ஒரேநாளில் ரூ.1,760 உயர்ந்து ஒரு சவரன் ரூ.93 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் நிலவரப்படி, கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 600-க்கும், ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்து 800-க்கும் விற்பனை ஆனது.

நேற்று தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிரடியாக உயர்ந்தது. நேற்று காலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 800-க்கும், சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.94ஆயிரத்து 400-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், நேற்று 2-வது முறையாக பிற்பகலில் மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 அதிகரித்து ரூ.95,200க்கும், கிராமுக்கு ரூ.100 உயர்ந்து 11,900-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது நகைபிரியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. காலையில், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ஒரு கிராம் ரூ.182-க்கும், ஒரு கிலோ ரூ. 1 லட்சத்து 82 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், பிற்பகலில் கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ரூ.1,000-ம் அதிகரித்து விற்பனையானது.

தங்கம் விலை நிலவரம்:

1) 13.11.2025 ஒரு சவரன் ரூ.95,200. (பிற்பகல்).

2) 13.11.2025 ஒரு சவரன் ரூ.94,400. ( காலை).

3) 12.11.2025 ஒரு சவரன் ரூ.92,800.

4) 11.11.2025 ஒரு சவரன் ரூ.93,600.

5) 10.11.2025 ஒரு சவரன் ரூ.91,840.

6) 09.11.2025 ஒரு சவரன் ரூ.90,400.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.