அறுபடை வீடுகளில் முக்கியத்துவம் வாய்ந்த பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா இந்த மாதம் 27ம் தேதி முதல் ஆரம்பமாகிறது. வருடந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் இந்த விழா, சாயரட்சை பூஜையில் காப்புக்கட்டுதல் நடைபெறும் நிகழ்ச்சியுடன் தொடங்க உள்ளது.
விழாவின் முதல் நாளிலிருந்து தினமும் மாலை 6.30 மணிக்கு சண்முகார்ச்சனை, சண்முகர் தீபாராதனை நடைபெற உள்ளது. முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பரணி தீபம், டிசம்பர் 2ம் தேதி மலைக்கோவிலில் ஏற்றப்படும்.
கார்த்திகை தினமான டிசம்பர் 3ம் தேதி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், விசேஷ பூஜைகள் நடைபெறும். அன்றைய மாலையில் 4 மணிக்கு சாயரட்சை பூஜை, 4.45 மணிக்கு சின்னக்குமாரர் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறும். இதனுடன் மலைக்கோவிலின் நான்கு திசைகளிலும் தீபம் ஏற்றப்படும்.

பின்னர் மாலை 6 மணிக்கு திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு, பாரம்பரிய வழக்கப்படி சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு நடத்தப்படும். அதேநேரத்தில் திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் மற்றும் பூம்பாறை முருகன் கோவில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.விழாவை சிறப்பாக நடத்த தேவஸ்தானம் சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!