ஈர கையுடன் வாஷிங் மிஷின் போட முயன்ற மூதாட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சென்னை புழல் அருகே விநாயகபுரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விநாயகபுரத்தைச் சேர்ந்த கோவிந்தம்மாள் (58) நேற்று தன் வீட்டில் துணிகளை சலவை செய்வதற்காக வாஷிங் மெஷினில் போட்டிருந்தார். அப்போது ஈர கையுடன் சுவிட்சை இயக்க முயன்றதாக கூறப்படுகிறது. அந்த சமயம் மின்சாரம் பாய்ந்து, அவர் திடீரென துடித்துக் கீழே விழுந்தார்.
அவரது அலறல் சத்தத்தைக் கேட்ட மகன் உடனே வந்து, கோவிந்தம்மாளை அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் மருத்துவர்கள் பரிசோதித்தபோது, அவர் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாஷிங் மெஷின் சுவிட்சை ஈர கையுடன் தொடுவது மரண விபத்துக்குக் காரணமாகியுள்ள இந்தச் சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!