சிக்கிம் மாநிலத்தின் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா அரசு தலைமையில் பணியாற்றி வரும் முதல்வர் பிரேம் சிங் தமாங் (57), நேற்று திடீரென உடல்நலக்குறைவால் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரேம் சிங் ட் ஹமங் மூக்கில் இருந்து திடீரென ரத்தம் வெளியேறியது பதற்றமடைய செய்த நிலையில், ரத்த அழுத்தம் திடீரென உயர்ந்தது பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியது. இதனையடுத்து, உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட முதல்வருக்கு மருத்துவமனையில் அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது.
மருத்துவர்கள் அவரின் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில், தற்போது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பு தெரிவித்துள்ளது. தேவையான பரிசோதனைகள் அனைத்தும் முடிந்த நிலையில், இன்று அவரை டிஸ்சார்ஜ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
முதல்வரின் திடீர் உடல்நலக்குறைவு மாநில அரசியல் வட்டாரங்களில் கவலை கிளப்பிய நிலையில், தற்போது அவரது உடல் நிலை முன்னேறி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!