போதைப்பொருள் வழக்கில் சிக்கி, தற்போது ஜாமீனில் இருக்கும் நடிகர் ஸ்ரீகாந்த் மீது அமலாக்கத்துறையும் பதிவு செய்துள்ள வழக்கில் விசாரணை தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது.
ஸ்ரீகாந்த் மற்றும் நடிகர் கிருஷ்ணா இருவரும் போதைப்பொருள் தொடர்பான வழக்கில் சில மாதங்களுக்கு முன்பு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் நீதிமன்றம் அவர்களுக்கு ஜாமீன் வழங்கியது. இதற்கிடையில், அவர்களின் பெயர்கள் முறைகேடான பணப் பரிமாற்ற தடை சட்டம் (PMLA) பிரிவுகள் கீழ் அமலாக்கத்துறை (ED) பதிவு செய்த தனிப் பிரிவு வழக்கிலும் இடம்பெற்றன.
இதனையடுத்து, கடந்த மாதம் 28ம் தேதி அமலாக்கத்துறை இருவருக்கும் சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராகுமாறு அறிவித்தது. முதல் சம்மனை ஏற்று நடிகர் கிருஷ்ணா ஏற்கனவே ED அலுவலகத்தில் ஆஜராகி 7 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை சந்தித்தார். ஆனால் அன்றைய தினம் ஸ்ரீகாந்த் ஆஜராக முடியாததாக கூறி கால அவகாசம் கோரி கடிதம் அனுப்பியிருந்தார். இதைத் தொடர்ந்து, அவருக்கு 2வது முறையாக ED சம்மன் அனுப்பியது.

அதன்படி நேற்று காலை ஸ்ரீகாந்த் சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி உள்ளார். அவரிடம் பொருளாதார பரிமாற்றங்கள், சந்தேகப்படும் தொகை விவரங்கள், போதைப்பொருள் வழக்குடன் தொடர்புடைய நிதி பரிமாற்ற ஆவணங்கள் ஆகியவற்றைப் பற்றி அதிகாரிகள் விரிவான விசாரணை நடத்தியுள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!