தமிழக அரசின் 'தொல்குடியினர் புத்தாய்வுத் திட்டம்' - விண்ணப்பங்கள் தொடக்கம்!
Dinamaalai November 14, 2025 01:48 PM

தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அறிமுகப்படுத்தியுள்ள தொல்குடியினர் புத்தாய்வுத் திட்டம்  2025–2026 கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் வரவேற்கப்படுகின்றன.பழங்குடியினர் தொடர்பான ஆய்வு மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட விரும்பும் இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டம் மற்றும் முனைவர் பட்ட மேலாய்வாளர்களின் திறன்களை ஊக்குவிக்க இந்தத் திட்டம் கடந்த கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்தை விட அதிகமாக இருக்கக் கூடாது என நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தாய்வுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகை:
இளங்கலை / முதுகலை மாணவர்கள் - மாதம் ரூ.10,000 (6 மாதங்களுக்கு)
முனைவர் பட்டம் / மேலாய்வாளர்கள் - மாதம் ரூ.25,000 (3 ஆண்டுகளுக்கு)

2025–26 கல்வியாண்டிற்கான விண்ணப்பங்களைப் பெற புதிய இணையதளம் fellowship.tntwd.org.in உருவாக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப நெறிமுறைகள் மற்றும் முழு தகவல்களையும் இதே தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பங்கள்  டிசம்பர் 12ம் தேதி வரை ஆன்லைனில் ஏற்கப்படுகின்றன.தகுதியுடைய மாணவர்கள் இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.