பீகார் மாநில சட்டப்பேரவையின் 243 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஆரம்ப கட்டமாக, தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், தற்போது 190 தொகுதிகளுக்கான நிலவரங்கள் வெளியாகியுள்ளன. இதில், தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) 108 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி 70 தொகுதிகளிலும், ஜான் சுராஜ் கட்சி 5 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 7 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருவதால், முன்னணி நிலவரங்கள் தொடர்ந்து மாறிவரும் நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி தற்போது பெரும்பான்மையை நோக்கி நகர்ந்து வருகிறது.