அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயனுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்த மைத்ரேயன், அக்கட்சியின் அமைப்பு செயலாளராகவும் பணியாற்றியவர்.
கடந்த ஆகஸ்ட் மாதம், தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அவர் திமுகவில் இணைந்தார். மாநிலங்களவை தேர்தலில் தனக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில், அவருக்கு அதிமுக வாய்ப்பு வழங்காதது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், மைத்ரேயனை திமுகவின் கல்வியாளர் அணியின் துணை தலைவராக நியமித்து, கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
Edited by Mahendran