சென்னை கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள் மற்றும் சட்டமன்ற தேர்தல் குறித்து மாவட்ட செயலாளர்களுடன், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனையில் ஈடுபட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், “SIR என்பது பரவலாக தற்போது பேசப்பட்டு வருகிறது. இதற்கு பூத் கமிட்டி அமைத்தது மட்டுமின்றி முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் இருந்து விருதுநகர் வரை 4 கட்ட சுற்றுப்பயணம் தொடங்க உள்ளது. கடலூரில் ஜனவரி 9ம் தேதி நடைபெறும் தேமுதிக மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும். பெண்கள் மீதான தாக்குதல் சமீப நாட்களாக தமிழகத்தில் அதிகரித்துள்ளது. எப்படி ஒரு கூட்டணி அமைக்க வேண்டும் மக்களுடைய கூட்டணியாக மிகப்பெரிய பிரமாண்டமான கூட்டணியாக 2026 தேர்தலில் மக்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் மிகப்பெரிய பலமாக இருக்க கூடிய அளவில் சிந்தித்து நல்ல ஒரு முடிவு எடுப்போம் என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டோம். இரவு நேரங்களில் பெண்கள் தங்களுடைய பாதுகாப்பிற்காக வெளியில் செல்வதை தவிர்த்து கொள்ள வேண்டும்.
வட இந்தியாவிலிருந்து இங்கு வருபவர்கள் வேலைக்கு வரலாம். ஆனால் வாக்களர்களாக ஆகக் கூடாது. வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு. வாழ்வாதாரத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள் ஆனால், வாக்களிக்கும் உரிமை வழங்க கூடாது. தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணி 2026 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறோம். மாநாட்டுக்கு சரியாக 15 நாள் முன்பு மாவட்ட செயலாளர் அழைத்து ஒவ்வொருவருடைய கருத்தையும் கேட்டு கூட்டணி குறித்து உறுதி செய்யப்படும். சட்டம், ஒழுங்கு வேலை வாய்ப்பு பெண்கள் பாதுகாப்பு ஒரு உள்ளிட்டவைகளை வைத்து தேர்தலை சந்திக்க உள்ளோம். தேமுதிக 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி ஒன்பதாம் தேதி மாநாட்டில் சொல்லலாம் அல்லது அதற்கு முன்பும் சொல்லலாம் இல்லை காலச் சூழ்நிலைக்கு ஏற்ப தள்ளியும் செல்லலாம். தேர்தலுக்கு இன்னும் நேரம் அதிகம் இருக்கிறது . அப்போது எத்தனை சீட்டு கேட்பது யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து அறிவிக்கப்படும். 8 மண்டலங்களாக தேமுதிகவில் பிரிக்கப்பட்டு ஐந்து மண்டலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.