வியட்நாம் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த ஒருவருக்கு, அவருக்கு அருகில் அமர்ந்திருந்த சிறு குழந்தையின் தொடர்ச்சியான அலறல் மற்றும் அட்டகாசங்கள் காரணமாக, அந்தப் பயணம் மோசமான அனுபவமாக மாறியுள்ளது.
பால் லீ (Paul Lee) என்ற அந்தப் பயணி, தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தைத் ‘டிக் டாக்’ வீடியோவாகப் பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், அருகில் இருந்த குழந்தை இவரின் கை மற்றும் தோள்பட்டையைத் தொடர்ந்து உதைத்தபடியே இருப்பதைக் காண முடிகிறது.
View this post on Instagram
A post shared by People Magazine (@people)
விமானம் முழுவதும் குழந்தை அழுதுகொண்டு மற்றும் உதைத்துக் கொண்டிருந்த போதும், குழந்தையுடன் இருந்த தாயால் அதனைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால், அந்தப் பயணி பால் லீ, சண்டையைத் தவிர்ப்பதற்காகக் கோபப்படாமல் அமைதியாக இருந்துள்ளார்.
பலமுறை உதை வாங்கியபோதும், “நான் அவளை எதிர்கொள்ளவில்லை, கொஞ்சம் பொறுமையாக இருந்துவிட்டு, எனது பயணத்தை ரசித்தேன்” என்று லீ கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர், “பெற்றோரே, உங்கள் குழந்தை உங்களுக்கு மட்டுமே ஸ்பெஷல் என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவு, விமானங்களில் குழந்தைகள் மற்றும் பெற்றோரின் நடவடிக்கைகள் குறித்துப் பெரிய விவாதத்தை எழுப்பியுள்ளது.