பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் & சிந்த் வங்கி, நாடு முழுவதும் செயல்பட்டு வரும் தனது கிளைகளில் MSME ரிலேஷன்ஷிப் மேனேஜர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 30 காலியிடங்கள் நிரப்பப்படவுள்ள இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வலர்கள், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
குறிப்பாக, மார்க்கெட்டிங் அல்லது நிதித் துறையில் MBA முடித்தவர்களுக்கு கூடுதல் முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வணிக வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் கஸ்டமர் ரிலேஷன்ஷிப் அல்லது கிரெடிட் மேனேஜ்மெண்ட் பிரிவில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் கட்டாயம்.
விண்ணப்பதாரர்கள் 01.11.2025 தேதியின்படி 25 வயது முதல் 33 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி, எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை வயது வரம்பில் தளர்வு உண்டு.
இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம் பொது பிரிவினருக்கு ₹800 எனவும், எஸ்சி/எஸ்டி மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு ₹100 மட்டுமே எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://punjabandsind.bank.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப செயல்முறை நவம்பர் 5, 2025 அன்று தொடங்கி, நவம்பர் 26, 2025 அன்று முடிவடைகிறது. கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து, மத்திய அரசு வங்கியின் பணியில் சேரும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.