ஹைதராபாத்: நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தானா நடிப்பில் வெளியான தி கேர்ள் பிரெண்ட் படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, ஹைதராபாதில் பிரம்மாண்ட வெற்றி விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக விஜய் தேவரகொண்டா கலந்து கொண்டார்.
விழா முழுவதும் இருவரின் கெமிஸ்ட்ரியும், பரஸ்பர மரியாதையும் ரசிகர்களை கவர்ந்தது. குறிப்பாக நிகழ்ச்சியின் இறுதியில் விஜய் ராஷ்மிகாவின் கைக்கு முத்தமிட்ட தருணம் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
விஜய் தேவரகொண்டாவை பற்றி பேசும் போது உணர்ச்சிவசப்பட்ட ராஷ்மிகா,“ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் விஜய் போன்ற ஒருவர் இருப்பது ஒரு வரம். இந்த படத்தின் வெற்றிப் பயணத்தில் என்னுடன் இருந்ததற்கு அவருக்கு நன்றி,”என்று கூறினார்.
தி கேர்ள் பிரெண்ட் படத்துக்கான தனது உணர்வை பகிர்ந்த ராஷ்மிகா,“இந்த கதையை கேட்டவுடன் நடிக்க வேண்டும் என தோன்றியது. என் ஆன்மாவிலிருந்த உணர்ச்சியை வெளிப்படுத்தினேன். ரசிகர்களின் ஆதரவே எனக்கு மிகப் பெரிய விருது,”என்று கண்கலங்கினார்.
அதே நேரத்தில், படம் பற்றி கருத்து கூறிய விஜய் தேவரகொண்டா,“படத்தைப் பார்த்தபோது வருத்தமாக இருந்தது. நம் பார்ட்னரின் கனவுகளை பாதுகாக்க வேண்டும்; கட்டுப்படுத்தக் கூடாது,”என்று தெரிவித்தார்.
ராஷ்மிகாவை பற்றி பேசும் போது,“கீதா கோவிந்தம் முதலே ராஷ்மிகாவை கவனித்து வருகிறேன். அவர் உண்மையிலேயே ஒரு பூமாதேவி. அவரது வளர்ச்சி பாராட்டத்தக்கது,”என்று புகழ்ந்தார்.
விழாவின் ஹைலைட் — மேடையில் ராஷ்மிகாவின் கைக்கு விஜய் தேவரகொண்டா முத்தமிடும் காட்சி. ரசிகர்கள் இதனை சமூக வலைதளங்களில் பெருமளவில் பகிர்ந்து வருகிறார்கள்.